Search

Saved articles

You have not yet added any article to your bookmarks!

Browse articles

GDPR Compliance

We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

மஹிந்திரா நிறுவன நிகர லாபம் 25% அதிகரிப்பு

மஹிந்திரா நிறுவன நிகர லாபம் 25% அதிகரிப்பு

மஹிந்திரா நிறுவன தலைமை நிதி அதிகாரி அமர்ஜோதி பருவா கூறும்போது, சீரற்ற பருவமழையால், டிராக்டர்களுக்கான தேவை குறைய வாய்ப்புள்ளது என்றார்.

பகிரவும் WhatsApp Facebook

மும்பையை தலைமையிடமாக கொண்டு செயல்படும் மஹிந்திரா அண்ட் மஹிந்திரா பன்னாட்டு வாகன உற்பத்தி நிறுவனமாகும். நடப்பு நிதியாண்டின் 2-ம் காலாண்டில், ஒருங்கிணைந்த நிகர லாபமாக ரூ.4,587.88 கோடி ஈட்டியுள்ளது.

இது கடந்த நிதியாண்டின் இதே காலாண்டில் ஈட்டிய ரூ.3,673 கோடியுடன் ஒப்பிடுகையில், 25 சதவீதம் அதிகமாகும். வாகனப் பிரிவில் ஏற்பட்ட வலுவான வளர்ச்சியே நிகர லாபம் 55 சதவீதம் உயர்ந்ததுக்கு காரணம். அதேசமயம், பண்டிகை காலம் மாறியதால், டிராக்டர் விற்பனைப் பிரிவின் லாபம் சரிவடைந்துள்ளது.

நிறுவன செயல்பாட்டு வருவாய் கடந்த ஆண்டு இதே காலாண்டில் ரூ.45,885.40 கோடியாக இருந்த நிலையில், நடப்பு நிதியாண்டில் ரூ.57,515 கோடியாக அதிகரித்துள்ளது. மொத்த செலவினங்களும் ரூ.41,192.50 கோடியிலிருந்து ரூ.51,845.48 கோடியாக உயர்ந்துள்ளன.

மஹிந்திரா நிறுவன தலைமை நிதி அதிகாரி அமர்ஜோதி பருவா கூறும்போது, "சீரற்ற பருவமழையால், டிராக்டர்களுக்கான தேவை குறைய வாய்ப்புள்ளது. அக்டோபர் முதல் டிசம்பர் வரையிலான மூன்றாம் காலாண்டில் சர்வதேச துணை நிறுவனங்களின் இழப்புகள் கணிசமாக குறையலாம்" என்றார்

நிறுவன நிர்வாக இயக்குநரும் குழும தலைமைச் செயல் அதிகாரியுமான அனிஷ் ஷா கூறுகையில், "வாகனப் பிரிவில் வலுவான நுகர்வோர் தேவையால், வளர்ச்சி தொடர்கிறது. மஹிந்திரா ஃபைனான்ஸ் வளர்ச்சிப் பாதையில் இருக்கிறது" என்றார்.

வாகன மற்றும் வேளாண் பிரிவு செயல் இயக்குநரும் தலைமைச் செயல் அதிகாரியுமான ராஜேஷ் ஜெஜூரிகர் கூறும்போது, "நிறுவனத்தின் எஸ்யூவி வாகன விற்பனை ஆண்டுக்கு ஆண்டு 26 சதவீதம் வளர்ச்சியடைந்துள்ளது. வருவாய் அடிப்படையில் சந்தைப் பங்கில் தொடர்ந்து முதலிடத்தை தங்க வைத்துள்ளது" என்றார்.

முந்தைய செய்தி
ஹாங்காங் ஜனநாயக ஆர்வலருக்கு 10 ஆண்டுகள் சிறை
அடுத்த செய்தி
ஐரோப்பாவில் விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்

தொடர்புடைய செய்திகள்